/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போஸ்டர்கள் அகற்றம்; சபாஷ்... மாநகராட்சி
/
போஸ்டர்கள் அகற்றம்; சபாஷ்... மாநகராட்சி
ADDED : பிப் 22, 2024 05:37 AM

திருப்பூர்: மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் ஒட்டியிருந்த விளம்பர போஸ்டர்களை துாய்மைப் பணியாளர்கள் அகற்றினர்.
திருப்பூர் காமராஜ் ரோட்டில் மாநகராட்சிக்குச் சொந்தமான மத்திய பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் இது கட்டப்பட்டுள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள இந்த பஸ் ஸ்டாண்டில் ஏராளமான கடைகள் கொண்ட வணிக வளாகம் உள்ளது. நுாற்றுக்கணக்கான பஸ்கள் இங்கு வந்து செல்கின்றன. தினமும் பல்லாயிரம் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள துாண்கள், சுற்றுச் சுவர்களில் ஏாரளமான ஸ்டிக்கர்கள், துண்டுப் பிரசுரங்கள், விளம்பர பதாகைகள் ஒட்டப்பட்டுள்ளன.
பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், கடைகள், வியாபாரிகள் தங்கள் நிறுவன விளம்பரங்களை இங்கு ஒட்டிச் சென்றுள்ளனர்.
இதனால், பஸ் ஸ்டாண்ட் வளாகம் அலங்கோலமாக காட்சியளித்தது. இதையடுத்து நேற்று மாநகராட்சி துாய்மைப் பணியாளர்கள் இவற்றை அகற்றும் பணியை மேற்கொண்டனர். துாண்களில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர் உள்ளிட்ட விளம்பரங்கள் சுரண்டி எடுத்து சுத்தம் செய்யப்பட்டது.
போஸ்டர்கள் அகற்றப்பட்ட மாநகராட்சியின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. போஸ்டர் ஒட்டப்படுவதைத் தடுக்கவும் அதிரடி நடவடிக்கை தேவை.