ADDED : ஜூலை 11, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையானது, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது. இந்த நெடுஞ்சாலையில், உடுமலை நகரப்பகுதியில், அதிகளவு ஆக்கிரமிப்புகள் உள்ளது.
இது குறித்து, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், நகரப்பகுதியில், 5 கி.மீ., தொலைவுக்கு, வரும், 15 ம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது. அதற்கு முன், ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான செலவினங்கள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து வசூலிக்கப்படும்,' என்றனர்.