/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவிலை அகற்றுங்க... நகராட்சி உத்தரவால் அதிர்ச்சி
/
கோவிலை அகற்றுங்க... நகராட்சி உத்தரவால் அதிர்ச்சி
ADDED : செப் 27, 2024 11:35 PM

பல்லடம்: பல்லடத்தில், ரிசர்வ் சைட்டில் கட்டப்பட்டுள்ள கோவிலை அகற்றிக் கொள்ளுமாறு நகராட்சி உத்தரவிட்ட நிலையில், கோவிலை பராமரிக்க அனுமதிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லடம் நகராட்சி, சின்னையா கார்டன் பகுதியில் வசிக்கும், குடியிருப்பினர் இணைந்து, ரிசர்வ் சைட்டில் விநாயகர் கோவில் கட்டி வழிபாடு செய்து வருகின்றனர். பூங்கா இடத்தில் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ள கோவிலை அகற்றிக் கொள்ளுமாறு, நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
இது குறித்து, அப்பகுதியினர் கூறியதாவது: டி.டி.சி.பி., துவங்கிய காலகட்டத்தில், பல்லடத்தில் முதல் முதலாக அனுமதி பெற்ற 'சைட்' இதுதான். அப்போது முதலே இங்குள்ள ரிசர்வ் சைட்டில் விநாயகர் கோவில் உள்ளது. பராமரிப்பின்றி இருந்த இக்கோவிலை தற்போது புதுப்பித்து வருகிறோம்.
இதற்கிடையே, பூங்கா இடத்தில் உள்ள கோவிலை அகற்றிக் கொள்ளுமாறு நகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. யாருக்கும் இடையூறு இன்றி, குடியிருப்புவாசிகள் இணைந்து கோவிலை புதுப்பித்து வழிபாடு செய்து வருகிறோம்.
எனவே, கோவிலை அகற்றாமல் தொடர்ந்து நாங்கள் வழிபாடு செய்ய நகராட்சி அனுமதி வழங்க வேண்டும், என்றனர்.