/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெளியே சீரமைப்பு; உள்ளே துர்நாற்றம்; பஸ் ஸ்டாண்டில் அவலம்
/
வெளியே சீரமைப்பு; உள்ளே துர்நாற்றம்; பஸ் ஸ்டாண்டில் அவலம்
வெளியே சீரமைப்பு; உள்ளே துர்நாற்றம்; பஸ் ஸ்டாண்டில் அவலம்
வெளியே சீரமைப்பு; உள்ளே துர்நாற்றம்; பஸ் ஸ்டாண்டில் அவலம்
ADDED : ஜூலை 14, 2025 08:05 PM

உடுமலை; கழிவு நீரால், துர்நாற்றம் வீசி, பஸ் ஸ்டாண்டில், சுகாதார சீர்கேடு நிலவுவதால், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பயணியர் வேதனைக்குள்ளாகி வருகின்றனர்.
உடுமலை பஸ் ஸ்டாண்டுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். குறுகலான இடத்தில் போதிய இடவசதி இல்லாமல் இயங்கி வரும் பஸ் ஸ்டாண்டில் பயணியர் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
புது பஸ் ஸ்டாண்டும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில், பஸ் ஸ்டாண்டின் பிரதான பகுதியில், அங்குள்ள கடைகளில் இருந்து கழிவு நீர் வெளியேறி, தேங்கி நிற்கிறது.
குறிப்பாக, மூணாறு, பழநி வழித்தட பஸ்கள் நிற்கும் இடத்தில் கழிவு நீர் நிரந்தரமாக தேங்கி, துர்நாற்றம் வீசி வருகிறது. அவ்வழியாக பஸ்கள் செல்லும் போது, பயணியர் மீது கழிவு நீர் தெறிக்கிறது.
ஆனைமலை வழித்தட பஸ்கள் நிற்கும் பகுதியிலும், கழிவு நீர் தேங்கியுள்ளது. மேலும் அவ்விடத்தில் யாரும் நிற்க முடியாத நிலை உள்ளது. பயணியர் நடந்து செல்ல வழியில்லாததால், கழிவு நீர் தேங்கியுள்ள பகுதியை கடக்க முடியாமல் வேதனைக்குள்ளாகின்றனர்.
நாள்தோறும் நுாற்றுக்கணக்கான பஸ்களும், ஆயிரக்கணக்கான பயணியரும் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்டில் சுகாதார சீர்கேடு நிரந்தரமாக உள்ளது.
முதல்வர் வருகைக்காக பஸ் ஸ்டாண்ட் அருகே, பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள், பஸ் ஸ்டாண்டுக்குள்ளும் எட்டிப்பார்த்து நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளார்கள்.