/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாசன திட்டங்களில் புதுப்பிக்கும் பணி; ரூ. 47.40 கோடி ஒதுக்கீடு
/
பாசன திட்டங்களில் புதுப்பிக்கும் பணி; ரூ. 47.40 கோடி ஒதுக்கீடு
பாசன திட்டங்களில் புதுப்பிக்கும் பணி; ரூ. 47.40 கோடி ஒதுக்கீடு
பாசன திட்டங்களில் புதுப்பிக்கும் பணி; ரூ. 47.40 கோடி ஒதுக்கீடு
ADDED : ஜூலை 29, 2025 08:13 PM
உடுமலை; அமராவதி மற்றும் பி.ஏ.பி., பாசன திட்டங்களில், அணை, கால்வாய் புனரமைப்புக்கு, ரூ. 47.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நீர் வளத்துறை சார்பில், அணைகள், கால்வாய்கள் புதுப்பித்தல் மற்றும் ஆறுகளின் குறுக்கே தடுப்பணை அமைத்தல் என, 254 திட்டங்களுக்கு, ரூ. 1,321.52 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பணிகளை துவக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதில், அமராவதி பாசன திட்டத்தில், அமராவதி அணையில், மதகுகள் நீர்க்கசிவை தடுக்கும் வகையில், புதுப்பிக்கும் பணிக்கு, ரூ.4.25 கோடி மற்றும் அமராவதி பிரதான கால்வாயில், கி.மீ., 16.5 முதல், 28.7 வரை புதுப்பிக்க, 5.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே போல், ஆழியாறு அணை, வேட்டைக்காரன் புதுார் கால்வாய் மதகு புதுப்பிக்கும் பணிக்கு, ரூ.4.75 கோடி, பி.ஏ.பி., திட்டத்தின் ஆதாரமாக உள்ள காண்டூர் கால்வாய் கி.மீ.,10.700 முதல், 11.100 கி.மீ.,வரை புதுப்பிக்க, ரூ. 8.50 கோடி மற்றும் இடது புறம், 12.560 முதல், 12.760 வரை புதுப்பிக்க, ரூ. 8.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பி.ஏ.பி., பிரதான கால்வாயில், 25 வது கி.மீ., முதல், 28.600 வரை, புதுப்பிக்கும் பணிக்கு, ரூ.9.95 கோடி மற்றும் 77.900 முதல், 78.835 வரை புதுப்பிக்க, ரூ. 2.15 கோடியும், அப்பர் நீராறு அணையில், நீர் வெளியேறும் குகை பகுதி புதுப்பிக்க, 5.50 கோடி நிதி என, ரூ. 47.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் கூறுகையில்,' நீர் வளத்துறை பணிகளுக்கு நிதி ஒதுக்கி, தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில், உரிய முறையில் டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கும்,' என்றனர்.