/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாடகை பாக்கி - கடைக்கு பூட்டு அதிகாரியுடன் வியாபாரிகள் விவாதம்
/
வாடகை பாக்கி - கடைக்கு பூட்டு அதிகாரியுடன் வியாபாரிகள் விவாதம்
வாடகை பாக்கி - கடைக்கு பூட்டு அதிகாரியுடன் வியாபாரிகள் விவாதம்
வாடகை பாக்கி - கடைக்கு பூட்டு அதிகாரியுடன் வியாபாரிகள் விவாதம்
ADDED : மார் 21, 2025 02:02 AM
பல்லடம்: வாடகை பாக்கி காரணமாக கடைக்கு பூட்டுப் போடப்பட்டதை தொடர்ந்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள், அதிகாரிகளுடன் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.
பல்லடம் பஸ் ஸ்டாண்டில் நகராட்சிக்கு உட்பட்ட வணிக வளாகத்தில், வியாபாரிகள் பலர் கடை அமைத்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாடகை செலுத்தாத காரணத்தினால், நகராட்சி அதிகாரிகள் சில கடைகளுக்கு பூட்டு போட்டனர். இதனால், ஆவேசம் அடைந்த வியாபாரிகள், பல்லடம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
முன்னதாக, நகராட்சியை முற்றுகையிட்ட வியாபாரிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அட்வான்ஸ் தொகை இருக்கும்போது எப்படி கடைக்கு பூட்டு போடலாம். எங்களுடைய பணம் உங்களிடம் உள்ளது.
வியாபாரிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் எந்த வசதிகளும் கிடையாது. ரோட்டிலேயே கடை போட்டு வியாபாரம் செய்கின்றனர். இப்படி இருக்க நாங்கள் எப்படி வாடகை செலுத்துவது என, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், வியாபாரிகள் கலைந்து சென்றனர்.
இது குறித்து, வியாபாரிகள் கூறியதாவது:
ஒவ்வொரு கடைக்கும் டெபாசிட் தொகை செலுத்தப்பட்டுள்ளது. ஒரு மாதம் மட்டுமே வாடகை தாமதமான நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, கடையில் விற்பனைக்காக வைத்திருந்த பொருட்களை உட்புறமாக துாக்கி எறிந்து, கடைக்கு பூட்டு போட்டு சென்றனர்.
இரண்டு ஆண்டுக்கு மேலாக மின் இணைப்பு இன்றி, அருகில் உள்ள கடையிலிருந்து மின்சாரம் எடுத்து பயன்படுத்தி வருகிறோம். இதனால், கூடுதல் மின் கட்டணம் கட்ட வேண்டி உள்ளது. ஒரு மாதம் மட்டுமே வாடகை பாக்கி உள்ள நிலையில், முன்னறிவிப்பு இன்றி கடையை பூட்டிச் சென்ற அதிகாரிகளின் செயல் கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.