/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில் தண்டவாளத்தில் மின்கம்பிகள் சீரமைப்பு பணி
/
ரயில் தண்டவாளத்தில் மின்கம்பிகள் சீரமைப்பு பணி
ADDED : ஜூன் 09, 2025 11:46 PM

திருப்பூர்; திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே, ரயில் தண்டவாளத்தில் மின்கம்பிகள் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு, சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
ரயில் வழித்தடத்தில் ரயில் இயக்கத்துக்கான, 25 ஆயிரம் வாட்ஸ் மின்கம்பிகள் (இன்ஜினை இழுத்தும் செல்லும் மெயின் லைன்) குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை சீரமைக்கப்படும். திருப்பூர் - ஊத்துக்குளி வழித்தடத்தில் மின்கம்பி நிலை குறித்து பொறியியல், மின்மேம்பாட்டு குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர்.
அவர்கள் கூறியதாவது;
காற்றின் வேகம், வெயில், மழை தாக்கம் காரணமாக மின்கம்பிகள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சற்று இறுகும் அல்லது நெகிழ்வு தன்மையுடையதாக மாறும்; இதனை ஆரம்ப நிலையில் கண்டறிய வேண்டும். இல்லையெனில், அடுத்தடுத்த இணைப்புகளுக்கு நேரடியாக மின்சாரம் சென்று சேரும் போது ஏதேனும் கோளாறு ஏற்படும். மின்கம்பிகள் நேராக இருந்தால் மட்டுமே தவறுகள் நேரிடாது. ஆகையால், குறிப்பிட்ட கால இடைவெளியில் நிலத்தில் இருந்து கம்பி உயரம், சீராக உள்ளதா என ஆராயப்படுகிறது. மின்கம்பிகள் தேய்ந்திருந்தால் அவை மாற்றப்படும்,' என்றனர்.