/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெருங்கும் குடியரசு தினம்; தேசியக்கொடி விற்பனை தீவிரம்
/
நெருங்கும் குடியரசு தினம்; தேசியக்கொடி விற்பனை தீவிரம்
நெருங்கும் குடியரசு தினம்; தேசியக்கொடி விற்பனை தீவிரம்
நெருங்கும் குடியரசு தினம்; தேசியக்கொடி விற்பனை தீவிரம்
ADDED : ஜன 20, 2025 11:39 PM

திருப்பூர்; வரும் 26ம் தேதி, குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, சர்வோதய சங்கங்களில் தேசிய கொடி விற்பனை துவங்கியுள்ளது.
நம் நாட்டின், 75வது குடியரசு தினம் வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய நாட்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகள், அலுவலகம், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து தனியார் இடங்களிலும், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவர். அவ்வகையில், குடியரசு தினத்தில் பயன்படுத்தப்படும் தேசியக் கொடிகள் விற்பனை தற்போது துவங்கியுள்ளது.
திருப்பூரில் உள்ள தமிழ்நாடு சர்வோதய சங்கம் சார்பில் கதர் துணியில், மூவர்ண தேசியக் கொடிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. பல்வேறு பகுதியில் உள்ள விற்பனை மையங்களுக்கும், மொத்த விற்பனையாளர்களுக்கும் இந்த கொடிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள இதன் விற்பனை மையத்தில் தேசியக் கொடிகள் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.