sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 குடியரசு தின விழா கோலாகலம்

/

 குடியரசு தின விழா கோலாகலம்

 குடியரசு தின விழா கோலாகலம்

 குடியரசு தின விழா கோலாகலம்


ADDED : ஜன 27, 2026 10:19 AM

Google News

ADDED : ஜன 27, 2026 10:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி ருப்பூரில் பல்வேறு அமைப்புகள் சார்பில், நாட்டின் 77வது குடியரசு தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) அலுவலகத்தில், குடியரசு தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. முன்னாள் பொதுசெயலாளர் பொன்னுசாமி, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சங்க தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் தாமோதரன், மூத்த உறுப்பினர்கள், நிர்வாகிகள், அலுவலர்கள் திரளாக பங்கேற்றனர்.

n திருப்பூர் மாவட்ட சுவரன் மாறன் கல்வி அறக்கட்டளை சார்பில், குடியரசு தினத்தை முன்னிட்டு, அரசு பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு, பேனா, உள்ளிட்டவை வழங்கப்பட்டன. திருப்பூர் மாவட்ட முத்தரையர் ஒருங்கிணைப்புக்குழு இளைஞரணி தலைவர் பாண்டி அம்பலம், வழங்கினார். செயலாளர் நந்தகுமார், அறக்கட்டளை நிறுவனர் தர்மராஜ் உள்ளிட்ட பேசினர்.

n அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த விழாவுக்கு, கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) ஹேமலதா தலைமை வகித்து, தேசிய கொடியேற்றினார். மாணவி அரிய நாச்சியார் வரவேற்றார். பேராசிரியர்கள் இந்திராணி, ரம்யா, பிரியங்கா விழாவினை ஒருங்கிணைத்தனர். வணிகவியல் (சர்வதேச வணிகம்) துறை விஜிதா, ஆதிநாராயணன், ஆங்கிலத்துறை அங்காள ஈஸ்வரி, துளசிமணி, ஆஷா சிறப்புரையாற்றினர். மாணவி ஐஸ்வர்யா நன்றி கூறினார்.

n திருப்பூர், பல்லடம் ரோட்டில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் நேற்று 77வது ஆண்டு குடியரசு தின விழா நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குணசேகரன், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முதன்மை குற்றவியல் நடுவர் மோகனவள்ளி, சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்து குடியரசு தினத்தின் சிறப்பு குறித்து பேசினர். விழாவில், நீதிபதிகள், வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us