ADDED : அக் 13, 2024 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போனஸ் தொடர்பாக, ஜின்னிங், டையிங், ஸ்கிரீன் பிரின்டிங் தொழிலாளர் முன்னேற்ற சங்க (எல்.பி.எப்.,) செயற்குழு கூட்டம், தலைவர் சேகர் தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
ஜின்னிங், டையிங், ஸ்கிரீன் பிரின்டிங் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, கடந்தாண்டைவிட நடப்பாண்டு 30 சதவீதம் கூடுதலாக தீபாவளி போனஸ் வழங்கப்படவேண்டும். டையிங் மாஸ்டர், ஹைட்ரோமேன், சாப்ட்புளோ ஆபரேட்டர், டையிங் மற்றும் கெமிக்கல் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, மூன்று மாத சம்பளத்தை போனஸாக வழங்கவேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.