/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விசைத்தறி கூலி உயர்வு வேண்டுகோள்
/
விசைத்தறி கூலி உயர்வு வேண்டுகோள்
ADDED : மார் 18, 2025 04:33 AM

திருப்பூர் : விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாவட்ட தலைவர் முத்துசாமி தலைமையில், அவிநாசி, மங்கலம், பல்லடம் பகுதி விசைத்தறி தொழிலாளர்கள், கூலி உயர்வு பெற்றுத்தரக் கோரி திருப்பூர் கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர்.
இது குறித்து, நிர்வாகிகள் கூறியதாவது:
பல்லடம், கண்ணம்பாளையம், அவிநாசி, தெக்கலுார், மங்கலம், 63 வேலம்பாளையம், புதுப்பாளையம், பெருமாநல்லுார் பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர் ஆயிரக்கணக்கானோர் வசித்துவருகின்றனர்.
விசைத்தறி தொழிலாளர்களின் தினசரி வேலை நேரம், 10 மணி நேரத்திலிருந்து, 14 மணி நேரமாக அதிகரித்துள்ளது. தொழிலாளர் இயக்கும் விசைத்தறிகளின் எண்ணிக்கையும், 8ல் இருந்து 16 ஆக இரட்டிப்பாகியுள்ளது. ஆனால், உரிய கூலி கிடைப்பதில்லை. கூலி உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, 37 மாதமாகிறது. தொழிலாளர் குடும்பங்கள், கல்வி, மருத்துவம், உணவுப்பொருட்களுக்காக அதிகம் செலவிட வேண்டியுள்ளது.
ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் விசைத்தறி உரிமையாளர்களை அழைத்து பேசி, கூலி உயர்வு கிடைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.