ADDED : ஜூலை 10, 2025 08:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை கொழுமம் ரோட்டில், மேம்பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலையில் உடுமலையில் இருந்து பழநிக்கு, மடத்துக்குளம், கொழுமம் வழியாக இரண்டு வழித்தடங்கள் உள்ளன. இதில் மாற்றுப்பாதையாக, கொழுமம் ரோடு பயன்படுத்தப்படுகிறது.
இந்த ரோட்டில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இதன் வழியாக 4 ரயில்கள் செல்கின்றன. இதனால், ரயில்வே கேட் பல முறை மூடி திறக்கப்படுகின்றன. இதனால், வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது. கேட் திறக்கப்படும் போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, கொழுமம் ரோட்டில், சம்பந்தப்பட்ட துறையினர் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.