/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அணைப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவு அரசுத்துறைகள் அகற்ற கோரிக்கை
/
அணைப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவு அரசுத்துறைகள் அகற்ற கோரிக்கை
அணைப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவு அரசுத்துறைகள் அகற்ற கோரிக்கை
அணைப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவு அரசுத்துறைகள் அகற்ற கோரிக்கை
ADDED : ஜூன் 22, 2025 11:12 PM
உடுமலை: உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், திருமூர்த்தி அணை அமைந்துள்ளது. பாசனத்துக்கும், குடிநீருக்கும் ஆதாரமாக உள்ள இந்த அணையை ஒட்டி, ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியும் அமைந்துள்ளது.
சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த, திருமூர்த்திமலை, முக்கிய சுற்றுலா தலமாகவும் உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்டுமுழுவதும், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
சுற்றுலா பயணியர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பல்வேறு இடங்களில் வீசி எறிகின்றனர்.
பிரதான கால்வாயில் இருந்து, மலை அடிவாரம் வரை, பல்வேறு இடங்களில், வாகனங்களை நிறுத்துகின்றனர். அவ்விடங்களில், பல்வேறு கழிவுகளை வீசுகின்றனர்.
முன்பு, தளி பேரூராட்சி மற்றும் இதர துறைகள் சார்பில், குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை 'மாஸ் கிளீனிங்' அடிப்படையில் கழிவுகள் அகற்றப்பட்டது. தற்போது இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை கண்காணித்து தடை செய்ய வேண்டும். இது குறித்த தகவல் பலகைகளை ஆங்காங்கே வைக்க வேண்டும்.
அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, கழிவுகளை அகற்றவும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.