/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பின்னலாடை தொழிலை இணைக்க வேண்டுகோள்
/
தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பின்னலாடை தொழிலை இணைக்க வேண்டுகோள்
தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பின்னலாடை தொழிலை இணைக்க வேண்டுகோள்
தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பின்னலாடை தொழிலை இணைக்க வேண்டுகோள்
ADDED : ஜூலை 19, 2025 12:18 AM

திருப்பூர்: தேசிய வேலை உறுதி திட்டத்தில், பின்னலாடை தொழிலையும் இணைக்க வேண்டுமென, திருப்பூர் தொழில்துறையினர், மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நேற்று பாப்பீஸ் ஓட்டலில், ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடினார்.
அதில், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணை தலைவர் சக்திவேல் பேசியதாவது:
திருப்பூரில் தொழிலாளர் பற்றாக்குறை சவாலாக மாறியுள்ளது. வடமாநில தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்து வழங்கினால், ஒரு லட்சம் தொழிலாளருக்கு வேலை வாய்ப்பு வழங்க திருப்பூர் தயாராக இருக்கிறது. தொழிலாளர் பாதுகாப்புக்காக, தங்கும் விடுதி வசதியை மேம்படுத்த வேண்டும். விடுதி வசதியை ஏற்படுத்தும் திட்டத்தில், 30 சதவீதம் மூலதன மானிய உதவி வழங்க வேண்டும். வேலை உறுதி திட்டத்தில், பின்னலாடை தொழிலை இணைத்தால், ஆண்டின், 365 நாட்களும் வேலை வாய்ப்பு வழங்க தயாராக இருக்கிறோம். கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதன் மூலமாக, திருப்பூரின் தொழிலாளர் பற்றாக்குறையை பூர்த்தி செய்யலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:
திருப்பூர் பின்னலாடைத்துறையின் அர்ப்பணிப்பு மற்றும் செயல்பாடுகள், நாட்டின் அன்னிய செலாவணியை ஈட்டித்தருகிறது. பணி கலாசாரமும் வியக்கத்தக்க வகையில் இருக்கிறது. தொழில்துறையில், பலமொழி பேசும், பல மாநில மக்களின் கலாச்சாரமும் இணைந்தே இயங்குகிறது. உலக வரைபடத்தில், திருப்பூரை இடம்பெற செய்ததில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பங்களிப்பு மகத்தானது. ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் என, ஆண்டுக்கு, 75 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது; உள்நாட்டு வணிகத்திலும், சர்வதேச சந்தைகளிலும், திருப்பூர் நீடித்து நிலைத்து நிற்கிறது. மத்திய அரசு, தேவையான சலுகைகளை வழங்கும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள், ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றனர்.