/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராம குளங்களுக்கு கால்வாயில் தண்ணீர் திறக்க கோரிக்கை
/
கிராம குளங்களுக்கு கால்வாயில் தண்ணீர் திறக்க கோரிக்கை
கிராம குளங்களுக்கு கால்வாயில் தண்ணீர் திறக்க கோரிக்கை
கிராம குளங்களுக்கு கால்வாயில் தண்ணீர் திறக்க கோரிக்கை
ADDED : அக் 24, 2025 11:51 PM
உடுமலை: மழைக்காலத்தில், பாசன நீர், வீணாவதை தடுக்க, குளங்களுக்கு தண்ணீர் வழங்க என குடிமங்கலம் வட்டார விவசாயிகள் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளனர்.
மனுவில், 'பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிமங்கலம் வட்டாரத்தில், பரவலாக பருவமழை பெய்து வருகிறது. நிலைப்பயிர்களுக்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது; விளைநிலங்களில், அதிக ஈரப்பதம் உள்ளது.
பொதுப்பணித்துறையினர், பாசன சபையினருடன் ஆலோசித்து, வீணாக செல்லும் தண்ணீரை கிராம குளங்களுக்கு திருப்பி விடலாம். இதனால், குளங்களில், தண்ணீர் தேங்கி, நிலத்தடி நீர் மட்டம் உயரும்' என கூறப்பட்டுள்ளது.