தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

 ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

 ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை


ADDED : ஏப் 10, 2026 06:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2026 06:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: உடுமலை ராஜேந்திரா ரோட்டில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்ற, நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலையில் பிரதான ரோடுகளாக, பொள்ளாச்சி ரோடு, பழநி ரோடு, ராஜேந்திரா ரோடு, தளி ரோடு, திருப்பூர் ரோடு, கல்பனா ரோடு போன்றவை உள்ளன. இதில் ராஜேந்திரா ரோட்டில் நகராட்சி சந்தை, அரசு மேல்நிலைப்பள்ளி, வணிக நிறுவனங்கள், ரயில்வே ஸ்டேஷன், கடைகள் அமைந்துள்ளன.

இதனால், இந்த ரோட்டில் போக்குவரத்து அதிகளவில் காணப்படும். மேலும், ரோட்டில், தள்ளுவண்டிகள், கடைகள் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

அவ்வப்போது சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, நெரிசலுக்கு காரணமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் பல முறை நகராட்சிக்கு மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, நகராட்சியினரும், போலீசாரும் இணைந்து, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் வாயிலாக, இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us