/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உதவித்தொகை, ஓய்வூதியம் வழங்க அரசுக்கு கோரிக்கை
/
உதவித்தொகை, ஓய்வூதியம் வழங்க அரசுக்கு கோரிக்கை
ADDED : ஆக 28, 2025 12:31 AM

உடுமலை:
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவி தொகை, ஓய்வூதியம் வழங்க வேண்டும், என ஜீவா அமைப்புசாரா பொது தொழிலாளர் சங்க, மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உடுமலையில், ஜீவா அமைப்புசாரா பொது தொழிலாளர் சங்க, மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார்.
மாநில செயலாளர் ராமராவ், ஒருங்கிணைப்பு குழு சொர்ணகுமார், மாநில செயற்குழு அப்பாஸ், நகர செயலாளர் தெய்வகுமார், பால் நாராயணன் ஒன்றிய செயலாளர் லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொழிலாளர் நல வாரியத்தில், கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்குவது போல், உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து பயன்களையும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். 60 வயது முதிர்ந்தவர்களுக்கு, 5 ஆயிரம் உதவி தொகை வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.