ADDED : ஜூன் 04, 2026 08:34 AM

அவிநாசியில் ஆய்வு: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திடக்கழிவு மேலாண்மை 2026 வழிகாட்டுதலின்படி ஜூன் 1 முதல் 5-ம் தேதி வரை 'துாய்மையான கிராமம், பாதுகாப்பான காலநிலை' என்ற விழிப்புணர்வு பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அவிநாசி பகுதியில் கலெக்டர் மனிஷ் நாரணவரே ஆய்வு செய்தார்.
ஆட்டையாம்பாளையம் தனியார் மண்டபத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட இயந்திரம்; வேலாயுதம்பாளையத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட செயல்பாடுகள்; பழங்கரை ஊராட்சியில் அமைந்துள்ள நாற்றுப்பண்ணை மற்றும் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி; அவிநாசிலிங்கம்பாளையம் அரசு துணை சுகாதார நிலையம் மற்றும் பூண்டி நகராட்சி பெரியாயிபாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். ஊராட்சிகள் உதவி இயக்குனர் சதீஷ்குமார், அவிநாசி பி.டி.ஓ.,க்கள் விஜயலட்சுமி, ஆறுமுகம், உதவி பொறியாளர்கள் குருபிரசாத், செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
