sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விற்கப்படும் 'ரிசர்வ் சைட்'; மீட்டெடுக்க வலியுறுத்தல்

/

விற்கப்படும் 'ரிசர்வ் சைட்'; மீட்டெடுக்க வலியுறுத்தல்

விற்கப்படும் 'ரிசர்வ் சைட்'; மீட்டெடுக்க வலியுறுத்தல்

விற்கப்படும் 'ரிசர்வ் சைட்'; மீட்டெடுக்க வலியுறுத்தல்


ADDED : ஜூன் 09, 2025 04:13 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: 'பூங்கா, சமுதாயக்கூடம் மற்றும் சிறுவர் பள்ளிகளுக்கு என ஒதுக்கப்பட்ட நிலங்களை, உள்ளாட்சிகள் வசம் ஒப்படைக்க வேண்டும்' என, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், அங்கீகரிக்கப்பட்ட வீட்டு-மனைகள், தனியார் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. வீட்டு-மனைக்கு ஒப்புதல் பெறும் போது, சம்பந்தப்பட்ட வீட்டுமனை-களில் உள்ள பூங்கா, சமுதாயக்கூடம் மற்றும் சிறுவர் பள்ளிக-ளுக்கு என ஒதுக்கப்படும் நிலங்கள் (ரிசர்வ் சைட்), நகர் ஊர-மைப்பு துறையால் ஒப்புதல் பெறப்பட்டு பொது ஒதுக்கீடு செய்-யப்படும்.இவை, ஊராட்சி மற்றும் நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தான பத்திரம் வாயிலாக ஒப்படைக்கப்படும். பெரும்பாலான மனை விற்பனையாளர்கள், பொது ஒதுக்கீட்டு நிலங்களை விதிமுறைப்படி உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்ப-டைப்பதில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. பல்லடம் பகுதி சமூக ஆர்வலர் நாகூர் மீரான், திருப்பூர் கலெக்டருக்கு அனுப்பி-யுள்ள மனு: பல வீட்டுமனை உரிமையாளர்கள் பொது ஒதுக்கீட்டு நிலங்களை, நெடுங்காலம் தங்கள் வசம் வைத்திருந்து, அவற்றை விற்று விடுகின்றனர். இந்த முறைகேடுக்கு உள்ளாட்சி துறை அதி-காரிகளும் உடந்தையாக உள்ளனர். மனைப்பிரிவு வரைபடத்தில் உள்ளவாரே, பொது ஒதுக்கீட்டு நிலங்கள் நிலை நிறுத்தப்பட வேண்டும். அதில், கட்டுமானங்கள் இருப்பின் அனுமதியற்ற அபி-விருத்தியாக கருதி அப்புறப்படுத்த வேண்டும் என, மதுரை ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. எனவே, மாவட்டம் முழுவதும் முறைகேடாக விற்பனை செய்யப்பட்ட பொது ஒதுக்-கீட்டு நிலங்களை மீட்கவும், விதிமீறி கட்டப்பட்ட கட்டுமானங்-களை அகற்றி, உள்ளாட்சி அமைப்புகள் வசம் நிலங்களை ஒப்ப-டைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us