sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குடியிருப்போர் குரல்: சிறந்த குடியிருப்பாக திகழும் சிவசக்தி நகர்

/

குடியிருப்போர் குரல்: சிறந்த குடியிருப்பாக திகழும் சிவசக்தி நகர்

குடியிருப்போர் குரல்: சிறந்த குடியிருப்பாக திகழும் சிவசக்தி நகர்

குடியிருப்போர் குரல்: சிறந்த குடியிருப்பாக திகழும் சிவசக்தி நகர்


ADDED : ஜூன் 13, 2025 11:29 PM

Google News

ADDED : ஜூன் 13, 2025 11:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் மாநகராட்சியின் 57வது வார்டுக்கு உட்பட்ட, வீரபாண்டி - பலவஞ்சிபாளையம் ரோட்டில், காளி குமாரசாமி கோவில் அருகே சிவசக்தி நகர் குடியிருப்பு அமைந்துள்ளது.பிரதான ரோட்டிலிருந்து, 15 குறுக்கு வீதிகள் கொண்ட இப்பகுதி, ஊராட்சியாக வீரபாண்டி இருந்தபோது உருவானது. கடந்த 2000ம் ஆண்டில், புதிய வீடுகள் உருவாகின. குடியிருப்போர் நலச்சங்கமும் உருவானது. தற்போது, சங்க தலைவராக மகாராஜன், செயலாளராக சுந்தரபாண்டியன், பொருளாளராக மோகன்ராஜ் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.

உருவானது சங்கம்(படம் உள்ளது -- சிவசக்தி நகர் சங்கம் பலகையுடனான படம்)

குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:திருப்பூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்தவர்கள் இடம் வாங்கி சொந்த வீடு கட்டி குடியேறினோம். அந்த சமயத்தில் சுற்றுப்பகுதியில் சிறு திருட்டுகள் நடப்பது வாடிக்கையாக இருந்தது. வீடுகளின் பாதுகாப்பு, எங்களுக்குள் ஒரு ஒற்றுமையையும், இணைந்து பணியாற்றும் எண்ணத்தையும் வளர்க்கும் வகையில் இந்த சங்கத்தை உருவாக்கினோம்.

திருட்டு தடுப்பு

தொடர் இரவு ரோந்து மேற்கொண்டு திருட்டு சம்பவங்களை முழுமையாக தடுத்து, அதில் ஈடுபட்டவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தோம். திருடு போன பொருட்களை மீட்டு உரியவர்களிடம் சேர்ப்பித்தோம். சங்கம், 25 ஆண்டுகளாக முறையாக இயங்கி வருகிறது. மாதந்தோறும் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தவறாமல் நடத்தப்படுகிறது.

வீடுகளில் 'சிசிடிவி'(படம் உள்ளது -- சிசிடிவி உள்ள படம்)

கொரோனா பரவல் காலத்தில் சங்கம் சார்பில், பல பகுதிகளுக்கும் மளிகை, காய்கறி போன்ற உதவிகளை வழங்கினோம். குடியிருப்புவாசிகள் இதில் முழு மனதோடு உதவி வழங்கினர். பாதுகாப்பு கருதி அனைத்து வீடுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த அறிவுறுத்தினோம். ஒரு சில வீடுகள் தவிர பெரும்பாலான வீடுகளில் இது அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இது முழுமையாக பொருத்தப்படும்.

ரோடுகள் மோசம்(படம் உள்ளது -- மண் ரோடு படம்)

எங்கள் பகுதியைப் பொறுத்தவரை மனைப்பிரிவு உருவான போது அமைக்கப்பட்ட ரோடுகள் சில வீதிகளில் மோசமான நிலையில் உள்ளது. அந்த வீதிகளில் ரோடு சீரமைக்க வேண்டும். குடிநீர் இணைப்பு அனைத்து வீடுகளிலும் உள்ளது. தேவையான அளவு குடிநீர் பெறப்படுகிறது. அதேபோல் தெரு விளக்குகள் தேவையான எண்ணிக்கையில் தேவையான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

குப்பை பிரச்னை இல்லை

குப்பை பிரச்னையும் எங்கள் குடியிருப்பில் இல்லை. தினமும் வீடு வீடாக வந்து ஊழியர்கள் குப்பை கழிவுகளை பெற்று செல்கின்றனர். இதனால் தெருக்கள், வீதிகள் எங்கும் குப்பை தேங்குவது இல்லை. பிரதான ரோட்டில் காலை நேரம் பள்ளி, கல்லுாரி செல்வோர், வேலைக்குச் செல்வோர் என வாகனப் போக்குவரத்து அதிகம் காணப்படும். இதில் சிலர் ரோட்டை ஆக்கிரமித்து கட்டடம் அமைத்து, குறுகலாக்கி விட்டனர். இதனால், பரபரப்பான காலை நேரத்தில் தினமும் வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் நிலவுகிறது. ஆக்கிரமிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

---

தனி படங்கள்

சிவசக்தி நகர் குடியிருப்பு

---

சிவசக்தி நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் மகாராஜன், செயலாளர் சுந்தரபாண்டியன், பொருளாளர் மோகன்ராஜ்.

பூங்கா சீரமைப்பு அவசியம் - 3 படங்கள்

சிவசக்தி நகர் பகுதியில் ஏறத்தாழ முக்கால் ஏக்கர் பரப்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டில் நமக்கு நாமே திட்டத்தில், 8.10 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்த பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்று போன்றவை முறையாக பராமரிக்கப்படாமல் பாழடைந்த நிலையில் உள்ளது. இவற்றை முழுமையாக சீரமைத்து வழங்கும் நிலையில், குடியிருப்போர் சங்கத்தினர் இதை முறையாக பராமரித்து தங்கள் பொறுப்பில் எடுக்க தயாராக உள்ளனர். பூங்கா சீரமைப்பு செய்து பயன்பாட்டுக்கு வரும் நிலையில், தினமும் நுாற்றுக்கணக்கானோர் பயன்படுத்துவர். ---சிவசக்தி நகர் பூங்கா சீரமைக்கப்பட வேண்டும்கழிவுநீர் பிரச்னைகுடியிருப்பு பகுதியில் கழிவு நீர் செல்ல வடிகால் அமைப்பு இல்லை. இதனால், வீடுகளில் குழி தோண்டி கழிவு நீரை உள்ளே இறக்கும் நிலை உள்ளது. பல வீடுகளில் கழிவுநீர் பொங்கி வீதியில் வந்து பாய்கிறது. இதற்கு தீர்வு காண வேண்டுமென்றால், டிஸ்போசபிள் பாயின்ட் பல பகுதிகளைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. பெரிய அளவில் திட்டமிட வேண்டும். அதற்குப் பதிலாக பாதாள சாக்கடை திட்டம் வந்தால் நிரந்தர தீர்வும், கூடவே எங்களுக்கு நிம்மதியும் கிடைக்கும். ---2 படங்கள்ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.வீடுகள் முன் குழி தோண்டி கழிவுநீரை வெளியேற்ற வேண்டியுள்ளது.








      Dinamalar
      Follow us