ADDED : ஏப் 21, 2025 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய கம்யூ., கட்சியின் பல்லடம் ஒன்றிய மாநாடு நேற்று நடந்தது.
நிர்வாகிகள் கணேசன், பரமசிவம், சிவகாமி ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் ஒன்றிய செயலாளர் சுப்பிர மணியம் வரவேற்றார். மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் சுப்பராயன், மாவட்டக்குழு உறுப்பினர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளராக சாகுல் ஹமீது உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக தேர்வாயினர். பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பனப் பாளையம் முதல் அண்ணா நகர் வரை மேம்பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில செயற்குழு உறுப்பினர் வஹிதா நிஜாம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒன்றிய குழு உறுப்பினர் யுவனேஷ் நன்றி கூறினார்.

