sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கிராம சபையில் நிறைவேற்றும் தீர்மானங்கள் நடைமுறைக்கு வருவதில்லை! அடிப்படை தேவைகளுக்கும் போராடும் அவலம்

/

கிராம சபையில் நிறைவேற்றும் தீர்மானங்கள் நடைமுறைக்கு வருவதில்லை! அடிப்படை தேவைகளுக்கும் போராடும் அவலம்

கிராம சபையில் நிறைவேற்றும் தீர்மானங்கள் நடைமுறைக்கு வருவதில்லை! அடிப்படை தேவைகளுக்கும் போராடும் அவலம்

கிராம சபையில் நிறைவேற்றும் தீர்மானங்கள் நடைமுறைக்கு வருவதில்லை! அடிப்படை தேவைகளுக்கும் போராடும் அவலம்


ADDED : ஆக 19, 2025 09:23 PM

Google News

ADDED : ஆக 19, 2025 09:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:

ஊராட்சிகளில், மக்கள் பிரச்னை சார்ந்து நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் எதுவும் நடைமுறைக்கு வருவதில்லை; அரசின் வழிகாட்டுதல்களையும் செயல்படுத்த ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

பஞ்சாயத்து ராஜ் சட்ட வழிகாட்டுதலின்படி, ஊராட்சிகளில், சுதந்திர தினம் உள்ளிட்ட நாட்களில், கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இச்சபைகளில் விவாதித்து, தீர்மானம் நிறைவேற்ற, கூட்டப்பொருள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக ஆணையரால், அனுப்பி வைக்கப்படுகிறது. இதனுடன், அரசு சார்ந்த திட்டங்கள், கிராம மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதித்து, தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இந்த தீர்மானங்கள் அடிப்படையில், மக்களுக்கான அடிப்படை பிரச்னைகளை தீர்க்க, ஊராட்சி, ஒன்றிய நிர்வாகத்தினரும், ஊரக வளர்ச்சித்துறையும் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

ஆனால், தீர்மானங்கள் நிறைவேற்றி, மக்களிடம் கையெழுத்து பெறுவதுடன் அடுத்த கட்ட பணிகள் எதுவும் மேற்கொள்வதில்லை.

ஆர்வம் காட்டுவதில்லை கிராம சபைகளில் தொடர்ந்து மனு கொடுத்து, தீர்மானம் நிறைவேற்றினாலும், எவ்வித பலனும் கிடைக்காமல் வெறுப்படையும் மக்கள், அடுத்த கிராம சபையில் பங்கேற்க ஆர்வம் காட்டுவதில்லை.

கடந்த சுதந்திர தினத்தையொட்டி, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட, 72 ஊராட்சிகளில் நடந்த கிராம சபையில், விவாதிக்க, கூட்டப்பொருள் ஊரக வளர்ச்சித்துறையால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அதில், கிராமங்களில் பிரதானமாக உள்ள குடிநீர் தட்டுப்பாடு, பாதுகாப்பான குடிநீர் வினியோகத்தை மேற்கொள்ள வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி, 'மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், கிராம குடிநீர் உட்கட்டமைப்பு பணிகளுக்கு, 10 சதவீத சமூக பங்களிப்பை பெற்று, குடிநீர் வினியோக பணிகளில், அனைவரும் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்.

பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக்குழு பெண்களை கொண்டு, ஏற்கனவே வினியோகம் செய்யப்பட்டுள்ள கள ஆய்வு கருவிகளை பயன்படுத்தி, 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் தரத்தை ஆய்வு செய்து, உரிய பதிவேட்டில் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளிலும், குளோரின் கலப்பான் கருவிகளை பொருத்தி, குடிநீரில் குளோரின் கலப்பதை உறுதி செய்ய வேண்டும்,' உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாதுகாப்பான குடிநீர் வினியோகத்துக்காக, 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ், பல்வேறு வழிகாட்டுதல்கள் மத்திய அரசால் வழங்கப்பட்டாலும், அவை முறையாக செயல்படுத்தப்படுவதில்லை.

குறிப்பாக குடிநீரை பரிசோதிக்க, பல முறை பயிற்சி வகுப்புகள் நடத்தி, அப்பணிகளுக்கான கள ஆய்வு கருவிகளும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த கிராமத்திலும், இந்த கள ஆய்வு கருவிகளை பயன்படுத்தி, குடிநீரை பரிசோதிப்பதில்லை.

இதனால், மழைக்காலத்தில், தரமற்ற குடிநீர் வினியோகிக்கப்பட்டு, மக்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பிட்ட இடைவெளிகளில், இத்தகைய பணிகளை ஒன்றிய மண்டல அலுவலர்களும் கண்காணிப்பதில்லை.

இவ்வாறு, கிராமங்களின் அடிப்படை பிரச்னைகளான குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு பராமரிப்பு குறித்து கிராம சபைகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் எதுவும் செயல்பாட்டுக்கு வருவதில்லை.

திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை. இதனால், அடிப்படை பிரச்னைகளுக்காக பல ஆண்டுகளாக போராடி வரும், கிராம மக்கள் அரசு மீது அதிருப்தியில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us