/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வளம் குன்றா உற்பத்தி' புரிந்துணர்வு ஒப்பந்தம்!
/
'வளம் குன்றா உற்பத்தி' புரிந்துணர்வு ஒப்பந்தம்!
ADDED : மார் 02, 2024 01:27 AM
திருப்பூர்;இந்தியளவில் ஆயத்த ஆடை, மேக்-அப்ஸ், வீட்டு அலங்காரப் பொருட்கள் ஆகியவை வளம் குன்றா வளர்ச்சி கோட்பாட்டின் கீழ் உற்பத்தி செய்யப்படுவதை ஆவணப்படுத்தி உறுதி செய்து, சான்றளிக்க வேண்டிய தேவையை கருத்தில் கொண்டு, மத்திய அரசின் ஆயத்த ஆடை மேக் - அப்ஸ், வீட்டு அலங்காரப் பொருட்கள், திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில், பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது.
இக்கழத்தின் வாயிலாக சுவிட்சர்லாந்து நாட்டின், 'புளுசைன் டெக்னாலஜி' என்ற நிறுவனம், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்றுமதி நிறுவனங்களுடன் ஏற்படுத்த உள்ளது. திறன் மேம்பாட்டு கழகத்தின் தலைவரும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவருமான சக்திவேல் தலைமையில், சுவிட்சர்லாந்தின் புளுசைன் டெக்னாலஜி நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி டேனியல் ரப்பனாச் மற்றும் இந்திய துணை கண்டத்திற்கான இயக்குனர் காத்ரீனா ஆகியோர், வளம் குன்றா வளர்ச்சி கோட்பாட்டின் கீழ் நடைபெறும் உற்பத்தியை எவ்வாறு ஆவணப்படுத்துவது என்பதை, காணொலி வாயிலாக விளக்கினர்.
அதன்பின், அந்நிறுவனத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. திறன் மேம்பாட்டு கழகத்தின் மூத்த இயக்குனர் ஸ்மிரிதி திவேதி, ஏற்றுமதியாளர்கள் சங்க பொது செயலாளர் திருக்குமரன், துணைத் தலைவர் இளங்கோவன், பொருளாளர் கோபால கிருஷ்ணன், இணை செயலர் குமார் துரைசாமி, செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

