/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்
/
ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்
ADDED : மே 06, 2025 11:29 PM
உடுமலை: உடுமலை தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
உடுமலை தென்னை மரத்து வீதியிலுள்ள சங்க அலுவலகத்தில் கூட்டம் நடந்தது. சங்க தலைவர் மணி தலைமை வகித்தார். கவுரவத்தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் திருமலைசாமி வரவேற்றார். செயலாளர் அழகிரிசாமி அறிக்கை வாசித்தார்.
பொருளாளர் ஞானபண்டிதன் வரவுசெலவு கணக்குகளை வெளியிட்டார். காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சங்க ஆண்டு விழா நடத்துவது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். பொதுக்குழு உறுப்பினர் ராம்தாஸ் நன்றி தெரிவித்தார்.