/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓய்வு பெற்ற ஆசிரியை கழுத்து அறுத்து கொலை
/
ஓய்வு பெற்ற ஆசிரியை கழுத்து அறுத்து கொலை
ADDED : செப் 09, 2025 11:20 PM

அவிநாசி; அவிநாசி அருகே அம்மாபாளையம், எஸ்.என்.ஜி., நகரை சேர்ந்தவர் சுப்பாத்தாள், 72. ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை.
கணவர் இறந்த நிலையில், வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியில் தங்கி, கட்டட வேலை செய்து வந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த ஆனந்தராஜ், 31 என்பவர், மூதாட்டியை நோட்டமிட்டு வந்தார்.
இவருக்கு கடன் பிரச்னை இருந்தது. இச்சூழலில், கடன் பிரச்னையை தீர்க்க, தனியாக உள்ள மூதாட்டியிடம் நகையை பறிக்க நேற்று மதியம் திட்டமிட்டார்.
தொடர்ந்து அவரது வீட்டுக்குள் சென்று, மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகையை பறிக்க முயன்றார். நகையை கொடுக்க மறுக்கவே, ஆத்திரத்தில் மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்து, நகையை பறித்து சென்றார்.
திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிச்சென்ற ஆனந்தராஜை நேற்றிரவு கைது செய்தனர்.