/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நர்ஸிங் துறையில் வேலை ரேவதி கல்லுாரி அசத்தல்
/
நர்ஸிங் துறையில் வேலை ரேவதி கல்லுாரி அசத்தல்
ADDED : ஜூன் 04, 2025 01:53 AM
திருப்பூர்; ''நர்சிங் துறையில் வேலை வாய்ப்பை உறுதிபடுத்துகிறது, ரேவதி நர்ஸிங் கல்வி நிறுவனம்; தற்போது மாணவர் சேர்க்கை துவங்கியிருக்கிறது'' என, நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர், ரேவதி கல்வி நிறுவன நிர்வாகத்தினர் கூறியதாவது:
மொத்தம், 12 துறைகளில், பி.எஸ்.சி., நர்சிங் இளங்கலை படிப்பு மற்றும் 'மருத்துவமனை நிர்வாகம்' தொடர்பான முதுநிலை படிப்பும் வழங்கப்படுகிறது. 5 துறைகளில் எம்.எஸ்.சி., நர்சிங் படிப்பு வழங்கப்படுகிறது. தமிழக அரசு, இந்திய நர்சிங் கவுன்சில், தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை அங்கீகாரத்துடன் இப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
திறமையான பேராசிரியர்கள், சிறந்த ஆய்வக வசதி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களுடன், கம்ப்யூட்டர் மயமான நுாலகம், சிறந்த விடுதி வசதி, பஸ் வசதி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி ரேவதி மருத்துவமனை மற்றும் தலைசிறந்த மருத்துவமனைகளில் பயிற்சி, அரசு மற்றும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெறவும் பயிற்சி மற்றும் உதவியும் வழங்கப்படுகிறது. தேவைப்படும் மாணவர்களுக்கு கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது.
மருத்துவ துறையில் பிஸியோதெரபிஸ்ட்கள் தேவை அதிகரித்து வரும் நிலையில், 'பிபிடி.,' எனப்படும் இளங்கலை படிப்பு, 6 மாத 'இன்டர்ஷிப்'புடன் கூடிய, நான்கரை ஆண்டு பயிற்சியாக வழங்கப்படுகிறது. பிளஸ் 2 வகுப்பில், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பிரிவில் படித்த மாணவ, மாணவியர், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் இணையலாம். தற்போது, மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
இவ்வாறு, கல்விக்குழு நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.