/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 26, 2025 12:12 AM

திருப்பூர்: பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, வருவாய்த்துறை சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை அரசு இயற்ற வேண்டும். கால அவகாசம் கொடுக்காமல், இலக்கு நிர்ணயிக்கும் போக்கை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும். பணிப்பளுவை கணக்கிட்டு, மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமன உச்சவரம்பு, 5 சதவீதம் என்பதை, மீண்டும், 25 சதவீதமாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும்.
வருவாய்த்துறையின் அனைத்து பணியிடங்களையும், நிரந்தர பணியாளர்களால் நியமிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 1 ம் தேதி வருவாய்த்துறை நாளாக அறிவித்து, அரசு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். வருவாய்த்துறை சங்கங்கள் கூட்டமைப்பின் கோரிக்கையை, பேச்சுவார்த்தை மூலமாக நிறைவேற்ற முதல்வர் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று மாநில அளவிலான போராட்டம் நடந்தது.
நேற்று மாலை, ஒரு மணி நேர வெளிநடப்பு மற்றும் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. வருவாய்த்துறை கூட்டமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.