ADDED : டிச 16, 2024 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுந்தரவடிவேல் அறிக்கை:
திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தில் அதிக உற்பத்தி பெறும் விவசாயிகளுக்கு, நெல் உற்பத்தி திறனுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் வெற்றிபெறும் விவசாயிகளுக்கு, 5 லட்சம் ரூபாய் சிறப்பு பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் விவசாயி, குறைந்தபட்சம் 2 ஏக்கர் பரப்பளவில் திருந்திய நெல் சாகுபடி செய்ய வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட நெல் ரகங்களை மட்டுமே பயிரிட்டிருக்க வேண்டும். வட்டார வேளாண் உதவி இயக்குனரை அணுகி, விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்துடன், பதிவு கட்டணமாக, 150 ரூபாய் செலுத்தவேண்டும்.