ADDED : ஜூலை 09, 2025 10:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திருச்சி - கோவை ரோட்டில் சோதனை நடத்தினர்.
அவ்வழியே வந்த லாரியை சோதனை செய்தனர். அதில், 11 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. விசாரணையில், பவானியை சேர்ந்த ஆனந்தன், 45 என்பதும், குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, சென்னிமலையில் உள்ள மில்லுக்கு கடத்தி செல்வது தெரிந்தது.
அவரை கைது செய்த போலீசார், 11 டன் ரேஷன் அரிசி, லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.