/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயரமில்லாத தடுப்பு சுவர் விபத்து ஏற்படும் அபாயம்
/
உயரமில்லாத தடுப்பு சுவர் விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : ஏப் 25, 2025 11:33 PM

உடுமலை: தேசிய நெடுஞ்சாலையில், பூலாங்கிணறு கிளைக்கால்வாய் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தின் தடுப்புச்சுவரை உயர்த்தி, ரிப்ளெக்டர்கள் பொருத்த வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை எஸ்.வி., மில், பூலாங்கிணறு உள்ளிட்ட இடங்களில், பி.ஏ.பி., கால்வாய் குறுக்கிடுகிறது.
ரோட்டின் அகலத்துக்கேற்ப பாலங்கள் விரிவுபடுத்தாமல் இருந்ததால், விபத்துகள் ஏற்பட்டு வந்தது. நீண்ட இழுபறிக்குப்பிறகு, பாலங்கள் விரிவுபடுத்தப்பட்டது.
இதில், பூலாங்கிணறு அருகே கட்டப்பட்ட பாலத்தின் தடுப்புச்சுவர்கள் போதிய உயரம் இல்லாமல் உள்ளது.
மேலும், சுவர்களில், இரவு நேரங்களில் பாலம் இருப்பது குறித்து வாகன ஓட்டுநர்கள் தெரிந்து கொள்வதற்கான ரிப்ளெக்டர்களும் பொருத்தவில்லை.
தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகமுள்ள நிலையில், விபத்துகளை தவிர்க்க, பாலத்தின் தடுப்புச்சுவரை உயர்த்தி கட்டி, தேவையான எச்சரிக்கை பலகைகளை வைக்க வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.