தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சந்திப்பு பகுதியில் பணி இழுபறி:  விபத்து ஏற்படும் அபாயம் 

சந்திப்பு பகுதியில் பணி இழுபறி:  விபத்து ஏற்படும் அபாயம் 

சந்திப்பு பகுதியில் பணி இழுபறி:  விபத்து ஏற்படும் அபாயம் 


UPDATED : ஜூலை 07, 2026 05:54 PM

ADDED : ஜூலை 07, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 07, 2026 05:54 PM ADDED : ஜூலை 07, 2026 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: உடுமலை அருகே, சந்திப்பு பகுதியில் பணிகள் நிறைவு பெறாமல் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

பொள்ளாச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பணிகள், உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் முழுமை பெறாமல் உள்ளது.

குறிப்பாக, உடுமலை அருகே, திருப்பூர், தாராபுரம் மாநில நெடுஞ்சாலை சந்திப்புகளில் உயர் மட்ட பாலமும், அதையொட்டி இதர கட்டமைப்புகளுக்கான பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது.

ஆனால், நான்கு வழிச்சாலையில் முழுமையாக போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில், சுங்கசாவடிகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. இதனால், நான்கு வழிச்சாலையில் வரும் வாகனங்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த ரோட்டில் அதிவேகத்தில் வரும் வாகனங்கள், தாராபுரம் மற்றும் திருப்பூர் ரோடு சந்திப்பு பகுதியில், அணுகுசாலை வழியாக பயணிக்க வேண்டியுள்ளது. அங்கு ரோட்டோர தடுப்பு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இழுபறியாக நடக்கிறது.

இரவு நேரங்களில், இப்பணிகளுக்கு குழிகள் தோண்டப்பட்டுள்ளது குறித்து தெரியாமல் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.

அதிக வாகனங்கள் வரும் போது நெரிசல் ஏற்படுகிறது. எனவே சந்திப்பு பகுதிகளில் பணிகள் நடைபெறுவது குறித்து நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தினர் முறையான எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும்.

விபத்துகளை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us