தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆர்.எம்.எஸ். ஆபீஸ் இடமாற்றம் மீண்டும் திட்டம் முறியடிப்பு

 ஆர்.எம்.எஸ். ஆபீஸ் இடமாற்றம் மீண்டும் திட்டம் முறியடிப்பு

 ஆர்.எம்.எஸ். ஆபீஸ் இடமாற்றம் மீண்டும் திட்டம் முறியடிப்பு


ADDED : ஜூன் 25, 2026 03:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 03:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்:நாடு முழுவதும் 25 தபால் அலுவலகங்களை மூடி, பெரிய மையங்களுடன் இணைக்கும் திட்டத்தின்கீழ், திருப்பூர் ரயில் நிலைய ஆர்.எம்.எஸ். அலுவலகத்தைக் கோவைக்கு மாற்றத் தபால் துறை திட்டமிட்டது. இதற்கு ஊழியர் சங்கங்கள், பா.ஜ. - கம்யூனிஸ்ட் மற்றும் வர்த்தக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, இடமாற்றத் திட்டம் தற்போது தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகரம் மற்றும் பல்லடம், அவிநாசி, அன்னுார் உட்படச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 25 துணை தபால் அலுவலகங்கள் இந்த ஆர்.எம்.எஸ். மையத்தையே சார்ந்துள்ளன. 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் 24 மணி நேரமும் இயங்கும் இம்மையம், கடந்த 5 மாதங்களில் பார்சல் புக்கிங் மூலம் 1.7 கோடி ரூபாயும், இரவு நேர புக்கிங் மூலம் மாதத்திற்கு 3 முதல் 4 லட்சம் ரூபாயும் வருவாய் ஈட்டியுள்ளது.

அகில இந்திய போஸ்டல் மற்றும் ஆர்.எம்.எஸ். பென்ஷனர்கள் சங்கப் பொருளாளர் வாசுதேவன் கூறுகையில், ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வர்த்தகம் நடக்கும் திருப்பூரில், தினமும் 5,000-க்கும் மேற்பட்ட பார்சல்கள் வருகின்றன. இம்மையம் கோவைக்கு மாற்றப்பட்டால் தபால்கள் வர ஒருநாள் தாமதமாகும். மத்திய அரசு ரயில் வழி தபால் போக்குவரத்தை ஊக்குவிக்கும் நிலையில், அதிகாரிகள் சாலைப் போக்குவரத்துக்கு மாறுவது எரிபொருள் விரயத்தையே ஏற்படுத்தும். தேவைப்பட்டால் பொள்ளாச்சி போன்ற பகுதிகளை இதனுடன் இணைத்து வலுப்படுத்தலாமே தவிர, மூடக்கூடாது. கடந்த 2004-லும் இதேபோன்ற முயற்சி எம்.பி. சுப்பராயன் தலையீட்டால் முறியடிக்கப்பட்டது என்றார்.

திருப்பூர், காலேஜ் ரோட்டில் உள்ள ஆர்.எம்.எஸ். அலுவலகம்

நாளை முதல் புதிய கட்டடம் அகில இந்திய ஆர்.எம்.எஸ். ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தனபாலன் கூறுகையில், எம்.பி.க்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் முயற்சியால் இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. திருப்பூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தபால் அலுவலகக் கட்டடத்திற்கு, நாளை (26-ம் தேதி) முதல் ஆர்.எம்.எஸ். அலுவலகம் மாற்றப்பட்டுச் செயல்பட உள்ளது. இருப்பினும், இந்தத் தற்காலிக நிறுத்தம் நிரந்தரத் தீர்வாகுமா என்ற சந்தேகம் வர்த்தகர்களிடையே நீடிக்கிறது என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us