/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆக்கிரமிப்பு அகற்றியபின் சாலை; பொதுமக்கள் வலியுறுத்தல்
/
ஆக்கிரமிப்பு அகற்றியபின் சாலை; பொதுமக்கள் வலியுறுத்தல்
ஆக்கிரமிப்பு அகற்றியபின் சாலை; பொதுமக்கள் வலியுறுத்தல்
ஆக்கிரமிப்பு அகற்றியபின் சாலை; பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : நவ 21, 2024 11:55 PM

பல்லடம் ; கணபதிபாளையத்தில் இருந்து, அல்லாளபுரம், உகாயனுார் வழியாக செல்லும் ரோடு, பொங்கலுார் மற்றும் திருப்பூர் --- -தாராபுரம் ரோட்டையும் இணைக்கிறது. திருப்பூருக்கு வேலைக்குச் செல்வோர், பள்ளி - கல்லுாரி மாணவர்கள், இந்த ரோட்டைத் தான் பயன்படுத்துகின்றனர்.
வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த ரோடு, சீரமைக்கப்பட வேண்டி கடந்த ஜூலை மாதம் பூமி பூஜை நடந்தது. ஆனால், ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின், ரோடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், 'வாகன போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டில், ஏராளமான ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால், ரோடு மிகவும் குறுகலாக உள்ளது. கடந்த, 1964ம் ஆண்டு போடப்பட்ட பி.ஏ.பி., வாய்க்கால் பாலம், இன்றுவரை அதே அளவில் உள்ளது. வாகன பெருக்கத்துக்கு ஏற்ப, ரோட்டை விரிவுபடுத்த வேண்டியது அவசியம். எனவே, பல லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட உள்ள இந்த ரோட்டில், உரிய அளவீடு பணி மேற்கொண்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் பிறகு ரோடு பணி மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.