/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழையால் ரோடு புதைந்தது; வாகன ஓட்டிகள் தவிப்பு
/
மழையால் ரோடு புதைந்தது; வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : செப் 22, 2025 12:32 AM

திருப்பூர்; திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதி பாலம் பணி நடந்து வருகிறது. வளம் பாலம் வழியாக, வாகனங்கள் சென்று வருகின்றன. நொய்யல் கரையோர ரோடு, வளம் பாலம் ரோடு சந்திப்பில், நாள் முழுவதும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
சில நாட்களாக மழை பெய்து வருவதால், வளம்பாலத்தில் இருந்து, கிழக்கே செல்லும் நொய்யல் ரோட்டில், தார்ரோடு மண்ணில் புதைந்துவிட்டது. ரோட்டின் குறுக்கே செல்லும் சாக்கடை கால்வாய் சிறுபாலத்தின் மீது, தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில், திடீரென தார்ரோடு குழியாக மாறிவிட்டால், வாகனத்தில் சென்றுவருவோர், விபத்துக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.
மாநகராட்சி நிர்வாகம், வளம் பாலம் சந்திப்பு பகுதியில், குண்டும், குழியுமாக உள்ள ரோட்டை சீரமைக்க வேண்டும். ரோடு புதைந்த இடத்திலும், விரைவில் 'பேட்ஜ்' ஒர்க் செய்ய வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.