/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலை குழி சீரமைப்பு வாகன ஓட்டிகள் நிம்மதி
/
சாலை குழி சீரமைப்பு வாகன ஓட்டிகள் நிம்மதி
ADDED : ஜூலை 20, 2025 01:51 AM

திருப்பூர் : திருப்பூர் நகரின் பிரதான சாலையில் விபத்துக்கு வழிகாட்டும் வகையில் இருந்த குழி, 'தினமலர்' செய்தி எதிரொலியால் சரி செய்யப்பட்டது.
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, புதிய பஸ் ஸ்டாண்ட், அவிநாசி, சேவூர், பெருமாநல்லுார், ஊத்துக்குளி, கோவை, ஊட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரயில்வே ஸ்டேஷன் சாலை உள்ளது.
சாலையின் மையப்பகுதியில் தார் பெயர்ந்து குழி ஏற்பட்டிருந்த நிலையில், வாகன ஓட்டிகள் தடுமாறினர். குழியில் சிக்காமல் வாகனங்களை ஓட்ட, டூவீலர் வாகன ஓட்டிகள் முற்படும் போது, பின் வரும் வாகனங்களில் மோதும் சூழலும் ஏற்பட்டது. இதுதொடர்பான செய்தி, 'தினமலர்' நாளிதழில் வெளியானது. அதன் எதிரொலியாக, அந்த சாலையை மாநகராட்சி நிர்வாகம் சீரமைத்துள்ளது.