/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு; என்.எஸ்.எஸ். மாணவர் பிரசாரம்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு; என்.எஸ்.எஸ். மாணவர் பிரசாரம்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு; என்.எஸ்.எஸ். மாணவர் பிரசாரம்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு; என்.எஸ்.எஸ். மாணவர் பிரசாரம்
ADDED : டிச 27, 2025 06:42 AM

திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ். அலகு -- 2 சார்பில், அவிநாசி ஒன்றியம், கருமாபாளையம் கிராமத்தில் ஏழு நாள் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
ஐந்தாம் நாளான நேற்று வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது. அவிநாசி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் எஸ்.ஐ. லோகநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் சண்முகசுந்தரம் வாழ்த்துரை வழங்கினார்.
கல்லுாரி முன்னாள் முதல்வர் சண்முகசுந்தரம் சிறப்புரை ஆற்றினார். கருமாபாளையம் பிரிவு பஸ் ஸ்டாப்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாணவ, மாணவியர் தலைக்கவசம் அணியாமல் சென்று விபத்து ஏற்பட்டது போல நடித்தும் விழிப்புணர்வு வாசகங்களை கூறி, துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வுஏற்படுத்தினர்.