sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி; மடத்துக்குளத்தில் நடந்தது

/

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி; மடத்துக்குளத்தில் நடந்தது

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி; மடத்துக்குளத்தில் நடந்தது

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி; மடத்துக்குளத்தில் நடந்தது


UPDATED : ஜன 22, 2026 05:51 AM

ADDED : ஜன 22, 2026 05:31 AM

Google News

UPDATED : ஜன 22, 2026 05:51 AM ADDED : ஜன 22, 2026 05:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: நெடுஞ்சாலைத்துறை மடத்துக்குளம் உட்கோட்டம் சார்பில், 37-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா- 2026 முன்னிட்டு, சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. உதவி கோட்டப்பொறியாளர் மகேந்திரகுமார் தலைமை வகித்தார்.

உதவிப்பொறியாளர் கார்த்திகேயன், சாலை ஆய்வாளர் சிவசாமி மற்றும் போக்குவரத்து போலீசார் பங்கேற்றனர். 'சாலையில் பாதுகாப்புக்கு பத்து' என்ற தலைப்பில், விழிப்புணர்வு பேரணி மடத்துக்குளம், தாலுகா அலுவலகத்தில் துவங்கி, பஸ் ஸ்டாண்ட், நால்ரோடு என பிரதான ரோடுகள் வழியாக வந்து, தாலுகா அலுவலகத்தில் நிறைவு பெற்றது.

இதில், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்கள் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். காரில் செல்பவர்கள் 'சீட் பெல்ட்' அணிய வேண்டும். சிறிது நேரம் முன்பாக கிளம்பி, ரோடுகளில் மிதவேகத்தில் செல்ல வேண்டும். தேவைப்படும் நேரத்தில் மட்டுமே வாகனத்தில் 'ஹை-பீம்' விளக்கு பயன்படுத்தவும், ரோட்டில் மித வேகமாக செல்வோர் இடது புறத்தில் பிற வாகனங்களுக்கு ஒதுங்கி வழிவிட வேண்டும். மது போதையில் வாகனங்கள் இயக்கக்கூடாது.

சாலை விதிகளை மதிக்க வேண்டும். ஓடும் பேருந்தில் ஏறவோ, இறங்கவோ கூடாது. ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட வேண்டும்.

எதிரில் உள்ள சாலை தெரியாமல் வாகனங்களை முந்தக்கூடாது போன்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட தட்டிகள் ஏந்தியும், சாலைப்பணியாளர்கள் விழிப்புணர்வு கோஷமிட்டபடியும், பொது மக்களுக்கு நோட்டீஸ்கள் வழங்கி, விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.






      Dinamalar
      Follow us