/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜன 20, 2024 02:36 AM

திருப்பூர்;வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மத்தியில், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில், போலீஸ் கமிஷனர் பிரவின்குமார் அபினபு, திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஆகியோர், கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். சப்-கலெக்டர் சவுமியா, தெற்கு ஆர்.டி.ஓ., ஆனந்த், தன்னார்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
'மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்'; 'தலைக்கவசம் உயிர்க்கவசம்', 'செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டாதீர்' என்கிற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, போலீசார், கல்லுாரி மாணவ, மாணவியர், ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம், கலெக்டர் அலுவலகம் முதல் பழைய பஸ்ஸ்டாண்ட் வரை சென்று திரும்பியது. வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.