/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டீ, வடை சாப்பிடுவதற்காகவா சாலை பாதுகாப்பு கூட்டம்? நகர் நல விரும்பிகள் 'காட்டம்'
/
டீ, வடை சாப்பிடுவதற்காகவா சாலை பாதுகாப்பு கூட்டம்? நகர் நல விரும்பிகள் 'காட்டம்'
டீ, வடை சாப்பிடுவதற்காகவா சாலை பாதுகாப்பு கூட்டம்? நகர் நல விரும்பிகள் 'காட்டம்'
டீ, வடை சாப்பிடுவதற்காகவா சாலை பாதுகாப்பு கூட்டம்? நகர் நல விரும்பிகள் 'காட்டம்'
ADDED : மே 03, 2025 04:48 AM
திருப்பூர்; திருப்பூரில் சாலை விபத்துகளை தவிர்க்க, மாநகர மற்றும் ஊரக போலீசார் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதேநேரம், மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறையினரின் ஒத்துழைப்பும் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்தில்லா திருப்பூர் என்ற நிலையை எட்டு வதற்கு அவசிய தேவையாக உள்ளது.
திருப்பூரின் பல இடங்களில், சாலை கட்டமைப்பு என்பது மிக மோசமாகவே உள்ளது. சாலை விதிகளை பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள் பின்பற்றுவதில்லை. சாலையோர ஆக்கிரமிப்புகளும் சாலை விபத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதனால், விபத்து தவிர்ப்பு என்பது, பெரும் சவாலான விஷயமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் மாவட்ட கலெக்டர் தலைமையில், மாதந்தோறும் சாலை பாதுகாப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மட்டுமே பங்கெடுக்கும் 'ரகசிய கூட்டம்' போன்று நடத்தப்பட்டு, சில முடிவுகள் எடுக்கப்படுகின்றன. 'இந்த கூட்டத்தின் பலன் பூஜ்யம்' என்பதே, நகர் நல விரும்பிகளின் ஆதங்கம்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்ட விழிப்புணர்வு பிரிவு மாநில செயலாளர் சதீஷ்குமார் கூறியதாவது: திருப்பூர் மட்டுமின்றி, தமிழகத்தின் பல மாவட்டங்களில், கலெக்டர்கள் தலைமையில் நடைபெறும் சாலை பாதுகாப்பு மற்றும் பரா மரிப்பு கூட்டம் என்பது, டீ, வடை சாப்பிட்டு செல்லும் நிகழ்வாகவே இருந்து வருகிறது. ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய கூட்டம் முறைப்படி நடப்பதில்லை.
சரியில்லாத சாலை கட்டமைப்பு, பின்பற்றப்படாத சாலை விதிகளால் தொடர்ந்து விபத்து நடக்கிறது; உயிரிழப்பும் நேரிடுகிறது. விலைமதிப்பற்ற உயிர்கள் தொடர்ந்து பலியாகின்றன.
விபத்துக்கான காரணம், அதற்கான தீர்வு உள்ளிட்டவற்றை விவாதித்து, அதை செயல்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு கூட்டங்கள் அமைய வேண்டும். இக்கூட்டங்களில் பங்கேற்க பொதுமக்களையும் அனுமதிக்க வேண்டும். அப்போது தான் தினசரி வாகனங்களில் பயணிக்கும் மக்கள், தங்கள் அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ள முடியும்; பிரச்னையின் தீவிரத்தை, அதிகாரிகளால் உணர்ந்துக் கொள்ளவும் முடியும்.
எனவே, சாலை பாதுகாப்பு பிரச்னை குறித்து பேச, மக்கள், நுகர்வோர் பங்கேற்கும் வகையில், 'சாலை பாதுகாப்பு பரா மரிப்பு மற்றும் மக்கள் குறை தீர்வு நாள்' என பெயர் மாற்றி நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசு தலைமை செயலர், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையருக்கு அனுப்பி வைத்துள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.