/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலையில் செல்லும் வாகனங்கள் கணக்கெடுப்பு பணி தீவிரம்
/
சாலையில் செல்லும் வாகனங்கள் கணக்கெடுப்பு பணி தீவிரம்
சாலையில் செல்லும் வாகனங்கள் கணக்கெடுப்பு பணி தீவிரம்
சாலையில் செல்லும் வாகனங்கள் கணக்கெடுப்பு பணி தீவிரம்
ADDED : மே 16, 2025 12:29 AM

திருப்பூர், ; பயணிக்கும் வாகனங்கள் எண்ணிக்கை ஏற்ப சாலையின் தரத்தை மேம் படுத்துவது, சாலை விரிவாக்கம் செய்வது உள்ளிட்ட பணிகளை ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்கிறது.
இதற்காக, நகரின் முக்கிய சாலையில் பயணிக்கும் வாகன எண்ணிக்கை நான்கு ஆண்டுக்கு ஒருமுறை கணக்கீடு செய்யப்படுகிறது.
கடந்த, 2021ம் ஆண்டு திருப்பூர் - காங்கயம் ரோடு, பி.என்., ரோடு, மங்கலம் ரோடு, திருப்பூர் - அவிநாசி ரோடு உள்ளிட்ட இடங்களில் வாகன எண்ணிக்கை கணக்கீடு செய்யப்பட்டது. நான்கு ஆண்டு முடிந்துள்ள நிலையில், இச்சாலை தரம் உயர்த்த, 202 க்கான கணக்கீடு பணி நேற்று துவங்கியது.
காங்கயம் ரோட்டில் சி.டி.சி., பஸ் டிப்போ முன்புறம், நல்லுார், பி.என்., ரோட்டில் பூலுவப்பட்டி, வாவிபாளையம், மங்கலம் ரோட்டில் அணைப்பாளையம், மங்கலம், கருவம்பாளையம், அவிநாசி ரோட்டில் அனுப்பர்பாளையம் உள்ளிட்ட நகரில், 12 இடங்களிலும், புறநகரில், நான்கு இடங்களிலும் கணக்கீடு பணி நேற்று துவங்கியது. கார், வேன், ஜீப், மினிபஸ், டாக்ஸி, மூன்று சக்கர வாகனம், இலகு ரக, கனரக வாகனம், பஸ், டூவீலர், விவசாய பயன்பாட்டு வாகனம் உள்ளிட்ட, 17 வகையான வாகனங்கள் கணக்கீடு செய்து, குறிப்பெடுக்கப்பட்டது.
வரும், 20ம் தேதி வரை இப்பணி நடக்குமென நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.