
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாநகராட்சி, 10வது வார்டுக்குட்பட்ட ஆத்துப்பாளையம், எஸ்.பி.கே., நகர் அருகில் உள்ள மண் சாலையில் தார் சாலை அமைக்க மாநகராட்சி சார்பில், மாநில நிதிக் குழு திட்டத்தின் கீழ் 71.24 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
முதலாம் மண்டல தலைவர் உமாமகேஸ்வரி, பணியை தொடங்கி வைத்தார். வார்டு கவுன்சிலர் பிரேமலதா, தி.மு.க., நிர்வாகிகள் ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.