ADDED : ஆக 26, 2025 11:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; சாலைப்பணியாளர்கள் பணி நியமன விவகாரத்தில் கோர்ட் உத்தரவை, 8 மாதமாக நிறைவேற்றாத மாநில அரசு, உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளது.
இதனை வாபஸ் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், நேற்று, மாலை நேர தர்ணா நடத்தினர். திருப்பூர், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் நடந்த தர்ணாவுக்கு, சங்கத்தின் தாராபுரம் கோட்ட தலைவர் பீட்டர் தலைமை வகித்தார். கோட்ட தலைவர்கள் ஞானசேகரன், சிவகுமார், சிங்கராயர், தாராபுரம் கோட்ட செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.
மாநில பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் ரமேஷ் ஆகியோர் பேசினர். ஈரோடு கோட்ட செயலாளர் துரைராஜ், நன்றி கூறினார்.

