/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கண், காது, வாயைப் பொத்தி சாலைப்பணியாளர் நுாதனம்
/
கண், காது, வாயைப் பொத்தி சாலைப்பணியாளர் நுாதனம்
ADDED : அக் 11, 2025 06:16 AM

திருப்பூர்; தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் திருப்பூர் கோட்டம் சார்பில், கண், காது, வாயை பொத்தி மவுன புரட்சி இயக்கம் நடத்தப்பட்டது.
திருப்பூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் நடந்த இயக்கத்துக்கு, கோட்ட தலைவர் கருப்பன் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர்கள் அண்ணாதுரை, சிவகுமாரன், இணை செயலாளர் கருப்பன், சின்னசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கோட்ட செயலாளர் ராமன், கோரிக்கையை விளக்கி சிறப்புரை ஆற்றினார். சாலைப்பணியாளர்களின், 41 மாத பணிநீக்க காலத்தை ஐகோர்ட் உத்தரவு படி பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.
இதுதொடர்பாக, அரசின் சார்பில் ஐகோர்ட்டில் செய்துள்ள மேல் முறையீடு மனுவை திரும்பப் பெற வேண்டும். நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்து, அரசே நெடுஞ்சாலைப்பணியை மேற்கொள்ள வேண்டும்.
கருணை அடிப்படையில் பணி நியமனம் கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் சாலைப்பணியாளர் குடும்பத்தினருக்கு விரைந்து பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.