/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாத பணிக்காலத்தை முறைப்படுத்த பறையடித்த சாலை பணியாளர்கள்
/
மாத பணிக்காலத்தை முறைப்படுத்த பறையடித்த சாலை பணியாளர்கள்
மாத பணிக்காலத்தை முறைப்படுத்த பறையடித்த சாலை பணியாளர்கள்
மாத பணிக்காலத்தை முறைப்படுத்த பறையடித்த சாலை பணியாளர்கள்
ADDED : ஜன 28, 2026 08:20 AM

திருப்பூர்: சாலை பணியாளர்களுக்கு ஊதிய மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பறை அடித்து நுாதன போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றும் சாலைப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராடி வருகின்றனர். 41 மாத பணி நீக்க காலத்தை கோர்ட் உத்தரவுப்படி பணிக்காலமாக முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும். நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்து விட்டு, சாலை பராமரிப்பு பணியை அரசே யெல்படுத்த வேண்டும்.
ஊதியத்தில், 10 சதவீதம் ஆபத்து படி, நிரந்தர பயணப்படி, சீருடை மற்றும் சலவைப்படி வழங்க வேண்டும். கல்வித் திறனுக்கு ஏற்ப, ஊதிய மாற்றம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை வலியுறுத்தி திருப்பூர் மண்டல அளவில் நேற்று பறையிசை முழக்கி நுாதன போராட்டம் நடத்தப்பட்டது.
காலேஜ் ரோட்டிலுள்ள நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்துக்குகோட்ட தலைவர்கள் வெங்கிடுசாமி, பாபு, செவந்திலிங்கம், கருப்பன் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாண்டியம்மாள் துவக்கி வைத்தார். திருப்பூர், கரூர், தாராபுரம், ஈரோடு கோட்ட நிர்வாகிகள் பேசினர். மாநில தலைவர் பாலசுப்ரமணியம் கோரிக்கைகள் குறித்து விளக்கினார்.
முன்னதாக, அரசு ஊழியர் மாவட்ட இணை செயலாளர் அவிநாசி ராமன் துவக்க உரையாற்றுகையில், ''பல ஆண்டுகளாக நாங்கள் நடத்தி வரும் போராட்டம் மற்றும் கோரிக்கைகள், தமிழக அரசின் காதுக்கு செல்ல வேண்டி, பறையிசைத்து இன்று (நேற்று) போராட்டம் நடத்தினோம்,'' என்றார்.

