ADDED : செப் 03, 2026 05:53 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்:திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில்
நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கத்தினர், ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
தாராபுரம் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன், நேற்று காலை
நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் கோட்ட தலைவர் வெங்கிடுசாமி
தலைமை வகித்தார். சாலை பராமரிப்பு ஊழியர்களுக்கு தேவையான கருவி,
உபகரணங்களை வழங்க வேண்டும், இறந்த சாலை பணியாளர்களின்
குடும்பத்தினருக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கம்
எழுப்பப்பட்டது.
