sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சாலை... குடிநீர்... குப்பை... சாக்கடை அடிப்படை பிரச்னைகளால் அல்லல்

/

சாலை... குடிநீர்... குப்பை... சாக்கடை அடிப்படை பிரச்னைகளால் அல்லல்

சாலை... குடிநீர்... குப்பை... சாக்கடை அடிப்படை பிரச்னைகளால் அல்லல்

சாலை... குடிநீர்... குப்பை... சாக்கடை அடிப்படை பிரச்னைகளால் அல்லல்


ADDED : மே 31, 2025 05:30 AM

Google News

ADDED : மே 31, 2025 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வார்டு பகுதிகள்:

முருங்கப்பாளையம், ராஜம்மாள் லே-அவுட், தாராக்காடு, குமார் நகர் தெற்கு, எம்.என்.எஸ்., நகர், சாய்பாபா நகர், கணேசபுரம், ஜி.வி.ஜி., நகர், பாலமுருகன் நகர், வி.பி.,சிந்தன்நகர், ராஜிவ் நகர், பாரதி வீதிகள்.

இ.கம்யூ., கட்சியை சேர்ந்த ரவிச்சந்திரன், 1996 முதல் வார்டு கவுன்சிலராக தொடர்கிறார்; 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட பகுதியாக உள்ளது.

உயர்ந்த தார் சாலைதாழ்ந்த மின் கம்பம்


வார்டின் அதிக மக்கள் தொகை, அதிக வீதிகளை கொண்ட பகுதியாக முருங்கப்பாளையம் உள்ளது. திருப்பூர் - அவிநாசி ரோட்டை ஒட்டிய இப்பகுதியில், சாலை, கால்வாய் வசதிகள் முழுமை பெற்றுள்ளது. மாகாளியம்மன் கோவில் பின்புற சந்து வீதியில் தார்சாலை உயரமானதால், மின்கம்பங்கள் தாழ்வாக மாறியுள்ளன. வாகனங்கள் நிறைய பயணிப்பதால், அடிக்கடி தீப்பொறி பறக்கிறது; மின் கம்பிகளை உயர்த்திக் கட்ட வேண்டும்.

நாய்கள்மயம்மக்கள் அச்சம்


ரோட்டில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்கும் பணி பெயரளவுக்கு மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. எந்த வீதியில் திரும்பினாலும், ஒன்றிரண்டு நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. குப்பைகளை நாய்கள் கிளறி, ரோட்டுக்கு எடுத்து வருவதும், வாகனங்களில் செல்வோரை துாரத்தும் செயல்களும் நடக்கிறது. குமார் நகர் தெற்கு வீதியில் தரைப்பாலம் சேதமாகி, சாலை குழியாகியுள்ளது. யாரும் விழுந்து விடும் முன் குழியை மூட வேண்டும்.

மிடுக்கான சாலையா?விபத்து சாலையா?


முருங்கப்பாளையத்தில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் மூலம் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை சேதமாகியுள்ளது. வார்டில் மெயின் ரோடு குறைவாகவும், சந்து, குறுக்கு வீதிகள், சந்திப்பு, நால்ரோடு, ரவுண்டானா போன்ற அமைப்பு சாலைகள் நிறைய உள்ளது. டூவீலர், பெரிய வாகனங்களில் 'விருட்'டென மக்கள் வந்து செல்கின்றனர். மிடுக்கான சாலைகள் உள்ள இடத்தில் விபத்து அபாயம் உள்ளது; வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.

ஆழமற்ற கால்வாய்தேங்கும் கழிவுநீர்


பாரதி வீதி, எம்.என்.எஸ்., நகரில் சாக்கடை கால்வாயை உயர்த்திக் கட்ட வேண்டும். உயரம் குறைவாக உள்ளதால், கழிவுநீர் வழிந்தோட வழியில்லை. மண் குவிந்து, பிளாஸ்டிக் குப்பை நிறைந்திருப்பதால், ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்குகிறது.

இப்பகுதியில் உள்ள கால்வாய்கள், 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை என்பதால், ஆழப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மழை பெய்தால் கொள்ளளவு பிடிக்காமல் மழைநீருடன், கழிவுநீர் வருகிறது.

மாநகராட்சி பள்ளிக்குதடுப்புச்சுவர் அவசியம்


பாலமுருகன் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு குடியிருப்புக்கு மத்தியில் உள்ளது. பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். பள்ளியின் பின்புறம், இடதுபுறம் முட்புதர் வளர்ந்துள்ளது; பள்ளி வளாகத்துக்குள் வர துவங்கியுள்ளது.

பள்ளி முன்புற பகுதி புவிஅமைப்பில் தாழ்வான பகுதி என்பதால், மழை பெய்யும் போதெல்லாம், மழைநீர் தேங்குவது, பள்ளிக்குள் மழைநீர் சென்று விடுவதுநடக்கிறது.

இதனால், சாலை அரிக்கப்பட்டு மண், ஜல்லிக்கற்கள் குவியலாக காணப்படுகிறது. பள்ளியின் முன்புறம் மண் கொட்டி உயரப்படுத்தி, சிமென்ட் சாலை அமைக்க வேண்டும். கணேசபுரம் முதல் மூன்று வீதிகளில் குப்பை தொட்டி வைக்க வேண்டும். திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பையால், நாய்த்தொல்லை அதிகரிக்கிறது.

கேள்விகளுக்கு பதில் இல்லை

கவுன்சிலர் ரவிச்சந்திரன் (இ.கம்யூ.,) கூறியதாவது:

தீர்க்கப்படாத பிரச்னைகள் இருந்தது; நீண்ட கால கவுன்சிலராக இருந்ததால், பெரும்பாலான பிரச்னைக்கு தீர்வு கிடைக்க செய்துள்ளேன். இன்னமும் தேவை உள்ளது. ஆங்காங்கே சாலை சேதம் உள்ளது. நான்காவது குடிநீர் திட்ட குழாய் பதித்து ஓராண்டுக்கு மேலாகியும் குடிநீர் இன்னமும் வீடுகளுக்கு சென்று சேரவில்லை.

குடிநீர் பிரச்னையை சமாளித்தாலும், தீர்வு என்பதும் இன்னமும் காணப்படாமல் உள்ளது. பாரதியார் வணிக வளாகத்தில், 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி நீண்ட நெடுங்காலமாக கட்டப்பட்டு வருகிறது. 'இப்பணி எப்போது முடியும்; ஒரு குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயுங்கள்,' என, ஒவ்வொரு மாநகராட்சி கூட்டத்திலும் கேள்வி கேட்கிறேன். இப்போது வரை இதற்கு பதில் இல்லை. மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணி முடிந்தால் மட்டுமே, நான்காவது குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வார்டுக்கு கிடைக்கும்.

குப்பை பிரச்னை வார்டுக்கு மட்டுமின்றி, மாநகராட்சிக்கு உடனடி தீர்வு காண வேண்டிய பிரச்னையாக உள்ளது. வாங்கும் குப்பையை பாறைக்குழியில் கொட்டுவது நிரந்தர தீர்வு அல்ல. திடக்கழிவு மேலாண்மை தோல்வி அடைந்துள்ளது. குப்பை பிரச்னைக்கு மாற்று தீர்வு காணாததால், வார்டில் குப்பை தேக்கமடைகிறது. ஊழியர் இருந்து குப்பை வீடுகளில் வாங்கினாலும், எங்கு சென்று கொட்டுவது என்ற இடம் தெரியாத நிலை உள்ளது. நிர்வாக திறமை இல்லாமல், அசட்டையாக செயல்படுவதால், குப்பை பிரச்னை தீராமல் உள்ளது.

பல்லாங்குழி சாலை

பாதங்கள் காலி

பி.வி.ஜி., நகர் முதல் வீதி, விரிவு, பாரதி வீதியில் சந்து, 'கட்' ரோடுகள் அதிகம்; இவ்விடங்களில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு, பாதாள சாக்கடை பணிக்கு அவை தோண்டப்பட்டதால், சாலை சேதமாகி, குண்டும் குழியுமாகியுள்ளது; வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். பாதசாரிகள் நடந்து செல்லும் போதே கற்கள் பாதங்களை பதம் பார்க்கும் நிலை உள்ளது.

வார்டின் பிரதான சாலைகளில் தார்ரோடு போடப்பட்டுள்ளது. அதே நேரம் விரிவாக்க பகுதிகளாக உள்ள கணேசபுரம், பாரதி வீதிகளில் மண்ரோடு, சேதமான நிலையில் சிமென்ட் ரோடு உள்ளது. குண்டும் குழியுமாக, பாதி பெயர்ந்த நிலையில் காணப்படும் இச்சாலைகளில் தினமும் வாகன ஓட்டிகள் தடுமாறியபடி பயணிக்கின்றனர். அடிக்கடி வாகனங்களில் செல்வோர் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் நிகழ்வுகளும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us