/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலையில் மண் வெட்டி கடத்தல் அமோகம்! அதிகாரிகள் ஆழ்ந்த உறக்கம்
/
சாலையில் மண் வெட்டி கடத்தல் அமோகம்! அதிகாரிகள் ஆழ்ந்த உறக்கம்
சாலையில் மண் வெட்டி கடத்தல் அமோகம்! அதிகாரிகள் ஆழ்ந்த உறக்கம்
சாலையில் மண் வெட்டி கடத்தல் அமோகம்! அதிகாரிகள் ஆழ்ந்த உறக்கம்
ADDED : ஜன 24, 2025 03:30 AM

பொங்கலுார் : பொங்கலுார் அருகே சாலையில், மண் வெட்டி கடத்தும் கும்பல் அதனை விற்பனை செய்து வருவது குறித்து, அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் நில மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மண் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்துள்ளது. இதனால், ரோட்டு மண்ணை கூட விட்டு வைக்காமல் வெட்டி கடத்தும் அவலம் அரங்கேறி வருகிறது.
இதனால், ரோட்டோரங்களில் பெரும் பள்ளம் ஏற்பட்டு, எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  பொங்கலுார், காட்டூர், தங்காய் புதுார், சேமலைக்கவுண்டம்பாளையம் போன்ற இடங்களில் ரோட்டோர மண் வெட்டப்பட்டுள்ளது. வருவாய்த் துறையினர் ரோட்டு மண்ணை வெட்டி எடுப்பவர்கள் மீது மென்மையான போக்கை கடைபிடிப்பதால், இது தொடர்கதை ஆகி வருகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், 'தற்போது நகரங்கள், கிராமங்கள் உட்பட எங்கு பார்த்தாலும், பள்ளி வாகனங்கள் வந்து குழந்தைகளை அழைத்துச் செல்கின்றன. கிராமப்புறங்களில் உள்ள சின்ன சின்ன ரோடுகளில் கூட மண் வெட்டி கடத்தப்படுகிறது. இதனால், பள்ளி வேன்களே முதலில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
மண் திருட்டை தடுக்காத வருவாய் துறையே முழு பொறுப்பு. ரோட்டு மண்ணை வெட்டி கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

