/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டோர பள்ளங்கள் சீரமைப்பு; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
/
ரோட்டோர பள்ளங்கள் சீரமைப்பு; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
ரோட்டோர பள்ளங்கள் சீரமைப்பு; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
ரோட்டோர பள்ளங்கள் சீரமைப்பு; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
ADDED : அக் 10, 2025 10:26 PM

உடுமலை; மாவட்ட இதர சாலைகள் பிரிவின் கீழ், பராமரிக்கப்படும் கிராம இணைப்பு ரோடுகளில், ரோட்டோர பள்ளங்கள் சீரமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கீழ், மாவட்ட இதர சாலைகள் பிரிவின் கீழ், அதிகளவு கிராம இணைப்பு ரோடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரோடுகளில் பருவமழை காலங்களில், ரோட்டோரத்தில் அரிப்பு ஏற்பட்டு, பள்ளங்கள் உருவாகிறது. பெரும்பாலான கிராம இணைப்பு ரோடுகள், இடைவழித்தடமாக பராமரிக்கப்படுகிறது.
குறுகலான ரோட்டில், ரோட்டோர பள்ளங்களில், வாகன ஓட்டுநர்கள் தடுமாறுவதை தவிர்க்க, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, கணியூர் - மைவாடி - பெரியகோட்டை ரோட்டில், ரோட்டோர பள்ளங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது.