sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருட்டில் ஈடுபட்டவர் கைது 38 சவரன் மீட்பு: டி.எஸ்.பி.,அறிவுரை பொதுமக்களுக்கு

/

திருட்டில் ஈடுபட்டவர் கைது 38 சவரன் மீட்பு: டி.எஸ்.பி.,அறிவுரை பொதுமக்களுக்கு

திருட்டில் ஈடுபட்டவர் கைது 38 சவரன் மீட்பு: டி.எஸ்.பி.,அறிவுரை பொதுமக்களுக்கு

திருட்டில் ஈடுபட்டவர் கைது 38 சவரன் மீட்பு: டி.எஸ்.பி.,அறிவுரை பொதுமக்களுக்கு


ADDED : ஏப் 11, 2025 10:33 PM

Google News

ADDED : ஏப் 11, 2025 10:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை,; உடுமலை பகுதிகளில், தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து, 38 சவரன் நகையை மீட்டனர்.

உடுமலை டி.எஸ்.பி., நமச்சிவாயம் கூறியதாவது:

உடுமலை உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்களை தொடர்ந்து, எஸ்.பி., உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படையினர், சி.சி.டி.வி.,காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

தாராபுரம் ரோடு, அய்யலுமீனாட்சி நகர் பகுதியில், திவான் (எ) சுப்ரமணியம்,25, என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில், உடுமலையில், 8 வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடமிருந்து, 38 சவரன் நகை மீட்கப்பட்டு, திருட்டு சம்பவங்களுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர் மீது, கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில், 10 திருட்டு வழங்குகள் உள்ளது.

திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டறியவும், பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைக்கும் வகையில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், கோடை விடுமுறை, விழாக்காலங்களில் வெளியூர் செல்லும் போது, உரிய பாதுகாப்புடன் வீடுகளை பூட்டி செல்ல வேண்டும்.

உரிய போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தால், கண்காணிப்பு செய்து திருட்டு சம்பவங்களை தடுக்க முடியும்.

பொதுமக்கள் டி.எஸ்.பி., - 94981 01323; 80725 19474, உடுமலை இன்ஸ்பெக்டர் -- 94981 01345; 94981 68530 மற்றும் போலீஸ் கட்டுப்பாட்டு அறை - 94981 01320; 94981 81208, 100 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அதே போல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் குறித்து, அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் - 94981 01353 மற்றும் 1098, 181 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, கூறினார்.






      Dinamalar
      Follow us