/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ரோபோட்டிக் லேப் டிஸ்பென்சர்' மெஷின்
/
'ரோபோட்டிக் லேப் டிஸ்பென்சர்' மெஷின்
ADDED : மார் 10, 2024 12:57 AM

திருப்பூர்:திருப்பூரில் இயங்கும் சாய ஆலைகள், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை செயல்படுத்தி, தேசிய அளவில் உயர்ந்த அந்தஸ்தை பெற்றுள்ளது. வெளிநாட்டு வர்த்தகர் விரும்பும் துல்லியமான கலர்களில், ஆடைகளை வடிவமைத்து கொடுப்பதில், திருப்பூர் சாய ஆலைகள் தனி சிறப்பு பெற்றுள்ளன.
சாய ஆலைகளில், பொதுவாக உள்ள சில வகை கலர்களை கொண்டு, சரியான விகிதத்தில் கலப்பதன் வாயிலாக, வர்த்தகர் கேட்கும் கலர்களை உருவாக்க வேண்டியுள்ளது. அதற்காக, ஆய்வகங்களில், கலர் 'செப்'களும் இருக்கின்றனர்.
நீண்ட நாட்களாக, ஆய்வர்கள் செய்து வந்த இப்பணியை, கம்ப்யூட்டரைஸ்டு ரோபோ மூலமாகவும் மேற்கொள்ள முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டரில், தாங்கள் விரும்பும் துல்லியமான கலரை பதிவு செய்தால், ரோபோ இயந்திரம், வைக்கப்பட்டுள்ள கெமிக்கல் மற்றும் கலர் இங்க்குகளில் இருந்து, அதேபோன்ற கலர்களை உருவாக்கி கொடுக்கிறது. வெளிநாடுகளில் இருந்து இவ்வகை ரோபோ மெஷின் இறக்குமதி செய்து பயன்பாட்டில் இருக்கிறது.
இந்நிலையில், இந்தியாவின் முதன்முதலாக வடிவமைக்கப்பட்ட 'ரோபோடிக் லேப் டிஸ்பென்சர்' இயந்திரம், 'நிட்-டெக்' கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
'ரோபோட்டிக்' மெஷின்களில், ஒரு மணி நேரத்தில், 24 கலர்களை தயாரிக்க முடியும். உடையாத வகையிலான பாட்டில்கள் பொருத்தப்பட்டுள்ளன. அடுத்தகட்ட பிராசசிங் செய்ய காத்திருக்காமல், உடனுக்குடன் மாற்றலாம். மிக குறைவான தண்ணீரை கொண்டு, அடிக்கடி சுத்தம் செய்யலாம்.
மெஷின் இருக்கும் ஸ்டாக் குறையும் போது, சிக்னல் கொடுக்கும் வகையிலான சாப்ட்வேர் பொருத்தப்பட்டுள்ளது. மிக குறைவான மின் பயன்பாட்டில் இவ்வகை மெஷின்களை இயக்க முடியும். திருப்பூர் சாய ஆலைகள், இந்தியாவில் வடிவமைத்த இவ்வகை மெஷின்களை பயன்படுத்தலாம் என, கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

